Archive for the ‘அவள்’ Category

அதிர்கிறதே என் இதயம்

March 17, 2010

சற்றுமுன் நீ நடந்துபோன
தடயம் எதுவுமின்றி
அமைதியாய்க் கிடக்கிறது வீதி

எனினும்
அதிவேக ரயிலொன்று
கடந்துபோன தண்டவாளம்போல்
இன்னும் அதிர்கிறதே
என் இதயம்

அன்று ரசித்தேன் இன்று சிரித்தேன்

March 17, 2010

நீ முகத்தில்
வந்து விழும் முடிகளை
ஒதுக்கிவிடும் போதெல்லாம்
உன் அழகு முகத்தை
ஆசையோடு பார்க்கவந்த முடிகளை
ஒதுக்காதே என்று
தடுக்க நினைப்பேன்
ஆனால் நீ முடிகளை ஒதுக்கிவிடுகிற
அழகைப் பார்த்த்தும்
சிலையாக நின்றுவிடுகிறேன்
அன்று ரசித்தேன் இன்று சிரித்தேன்
கரணம் அன்று முடி இன்று நான்………………..

அழ வைப்பவள் அவள்

January 12, 2010

அழ வைப்பவள்

அவள் என்று தெரிந்தும்

அடம் பிடிக்கிறது  என் கண்கள்

அவளைதான் காணவேண்டும் என்று……….